கொரோனா தொற்று நோயாளிகளுக்கு காச நோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், காசநோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா தொற்று, காசநோய் இரண்டுமே நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களாகும். இந்த நிலையில் அண்மைகாலமாக கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பலருக்கு காசநோய் நேரிடுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் மத்திய சுகாதார நலன் மற்றும் குடும்ப நலன்துறை அமைசகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்படிருப்பதாவது:
“காசநோய் பாதிப்பு திடீரென்று அதிகரித்துள்ளதாக ஊடங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் மத்தியில்தான் காசநோய் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. தினந்தோறும் காசநோய் தொற்றுக்கு ஆளோவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்தவர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதற்கு மத்தியில், மத்திய சுகாதாரம் மற்றும் குடுமநலத்துறை அமைச்சகமானது, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து மாநில அரசுகளுக்கு அனுப்பிய அறிவுறுத்தலில், காசநோய், கொரோனா தொற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், காசநோய் தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரிடம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தது.
கொரோனா தொற்று கட்டுபாடுகள் காரணமாக, 2020ம் ஆண்டு காசநோய் கண்டறிதல் 24 சதவீதம் குறைவாக இருந்தது. எனினும் மருத்துவமனைகளின் வெளிநோயாளிகள் பிரிவு, பாதிப்புகளை கண்டறிவதற்கான இயக்கம் ஆகியவை அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், கொரோனா தொற்று காரணமாக காசநோய் அதிகரித்திருக்கிறதா என்றும், காசநோய் காரணமாக கொரோனா அதிகரித்திருக்கிறதா என்றும் போதுமான ஆதாரம் ஏதும் இல்லை. எனினும் இரண்டு நோய்களும் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இரண்டு நோய்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய பொதுவான அறிகுறிகள் தென்படும்.
காசநோயும் ஒருவரது உடலில் நீண்டகாலம் தங்கியிருந்து பின்னர் ஒருநாள் மெதுவாக நோய் தொற்று பாதிப்பை ஏற்படுத்தும். இதன்காரணமாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களிடத்தில் காசநோய் தொற்று குறித்தும், காசநோய்க்கு உள்ளானவர்களிடம் கொரோனா தொற்று குறித்தும் பரிசோதனை நடத்தும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு மத்திய சுகாதார நலன் மற்றும் குடும்ப நலன்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








