தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்ந்த ஆறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார். அப்போது பேசியவர், டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் 23 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 1 முதல் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் எம்ஆர்பி விதிமீறல்கள் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுப்பதற்கும், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு 33 ஆயிரத்து 23 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 30 ஆயிரத்து 284 ரூபாய், உதவி விற்பனையாளர்களுக்கு 28 ஆயிரத்து 689 ரூபாய் என உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும்..
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20000 வழங்கப்படும்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு வரும் மூன்று சீருடைகள் துணி மற்றும் தையல் செலவிற்காக ரூ.6000 வழங்கப்படும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் எட்டு மணி நேர பணி ஒதுக்கீடு, மாதத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்தில் இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.




