கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகரில் இரவு குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் சமீப காலமாகச் சிறுத்தை கரடி போன்ற வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சம்பவம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது சிறுத்தை ஒன்று உணவு தேடி சாலை ஓரங்களில் உலா வந்ததோடு, அங்கு உணவு இல்லாததால் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.
அண்மை செய்திகள்: குழந்தை விற்பனை விவகாரம்; 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம்
சிறுத்ட்தை குடியிருப்பு பகுதியில் உலா வரும் அக்காட்சியானது குடியிருப்பு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
இதனால், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.







