மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை வீணடிக்காமல் தமிழ்நாடு அரசு முழுமையாக பயன்படுத்தி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கொரோனா
மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகப்படியான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை வீணடிக்காமல் தமிழ்நாடு அரசு முழுமையாக பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.








