குன்னூரில் சந்தனமரங்களை வெட்டி கடத்திய நபரை வனத்துறையினரின் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நான்சச் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. இது குறித்து வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டோரை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய ஜோதிகம்பை பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள நடராஜ் மற்றும் நாகராஜ் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.








