தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு 

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மே மாதத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவான கொரோனா பாதிப்பு ஜூன் மாதத்திற்குப் பிறகு படிப்படியாக குறைந்து தினசரி பாதிப்பு 2,000 என்ற அளவுக்கு…

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே மாதத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவான கொரோனா பாதிப்பு ஜூன் மாதத்திற்குப் பிறகு படிப்படியாக குறைந்து தினசரி பாதிப்பு 2,000 என்ற அளவுக்கு வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தொற்று சற்று அதிகரித்து வருகிறது.
நேற்று 1,859 பேருக்கு தொற்று பதிவான நிலையில் இன்று 1,947 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,57,611 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,050 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 2,193 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை நலம்பெற்றவர்களின் எண்ணிக்கை 25,02,627 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20,934 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டங்களைப் பொறுத்தவரை கோவையில் 230, சென்னையில் 215, ஈரோட்டில் 171, செங்கல்பட்டில் 109, தஞ்சையில் 101, திருப்பூரில் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
சென்னையில் நேற்று 181 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று சற்று அதிகரித்து 215 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. கோவையில் நேற்று 188 பேருக்கு பதிவான நிலையில் இன்று 233 பேருக்கு பதிவாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.