முக்கியச் செய்திகள் இந்தியா

கேரளாவில் நான்காவது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

கேரளா மாநிலத்தில் நான்காவது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் குறைந்து வருகிறது. எனினும் கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்காவது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றின் பாதிப்பு சதவீதம் 13.61 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 116 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுவரை கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,70,137 ஆக அதிகரித்திருக்கிறது. மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,701 ஆகவும் உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 14,651 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்றிருக்கின்றனர். இதுவரை 31,92,104 பேர் குணம் பெற்றிருக்கின்றனர். இப்போது கேரளாவில் மொத்தம் 1,60,824 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவிலேயே மலப்புரம் மாவட்டத்தில்தான் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இங்கு கொரோனா தொற்று காரணமாக 3670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோடு, எர்னாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொல்லம், ஆழப்புழா, கண்ணூர், திருவனந்தபுரம், கோட்டயம் மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் கேரளா முழுவதும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

G SaravanaKumar

அரிய வகை நோய் பாதிப்பு; சிறுமி மித்ராவுக்கு ரூ16 கோடி மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டது

G SaravanaKumar

இந்தியாவில் சமூக பரவலாக மாறியது ஒமிக்ரான்

G SaravanaKumar