“ராணுவத்தில் இருப்பது ஒரு தியாக வாழ்வு” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ராணுவத்தில் இருப்பது ஒரு தியாக வாழ்வு என்றும் அதற்கு தங்களை அர்ப்பணிப்பதற்கு மன உறுதி வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1971ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றிபெற்றதன் பொன் விழா…

ராணுவத்தில் இருப்பது ஒரு தியாக வாழ்வு என்றும் அதற்கு தங்களை அர்ப்பணிப்பதற்கு மன உறுதி வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1971ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றிபெற்றதன் பொன் விழா ஆண்டு நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றி தீபத்தை ஏந்தி வீரவணக்கம் செலுத்தினார். வீர் சக்ரா, பரம்வீர் சக்ரா உள்ளிட்ட விருதுகளை பெற்ற ராணுவ அதிகாரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு குடும்பத்தில் ஒருவர் ராணுவத்தில் இருந்தால் அந்த குடும்பமே ராணுவத்தில் இருப்பதாகத்தான் அர்த்தம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நாட்டை காப்பதிலும், முன்னேற்றுவதிலும் தங்களை ராணுவத்தினர் அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்றபோது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்றதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போர் நிதியாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் 6 கோடியை முதலமைச்சராக இருந்த கருணாநிதி வழங்கியதாக குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.