முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்த நிலையில், இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 422 பேர் உயிரிழந்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று புதிதாக 35 ஆயிரத்து 483 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5 ஆயிரத்து 169 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 982 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 944 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 259 நபர்களுக்கும், மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 139 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆயிரத்து 160 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில், ஆயிரத்து 407 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, தொற்றில் இருந்து குணமடைந்த 25 ஆயிரத்து 196 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 422 பேர் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!

Gayathri Venkatesan

கரூர், நாகை, சிவகங்கை மாவட்டங்களில் வேளாண் கல்லூரிகள்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Gayathri Venkatesan

கொரோனாவால் உயிரிழந்த (BPL) குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம்: கர்நாடக அரசு