முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் இன்று 820 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் தூறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. அத்துடன், கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் மிகக்குறைவான அளவிலேயே பதிவாகி வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று ஒரே நாளில் 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,12,404 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,251 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து 962 பேர் குணமடைந்தனர். இதுவரை நலம்பெற்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 26,66,140 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு 10,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட அளவில் சென்னையில் 125 பேருக்கும், கோவையில் 109 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100க்கும் கீழ் என்ற அளவிலேயே பாதிப்பு பதிவாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு

Halley karthi

நாட்டில் 79% குறைந்த சில்லறை விற்பனை!

யூரோ கால்பந்து திருவிழா இன்று அமர்க்கள ஆரம்பம்: முதல் போட்டியில் மோதுகிறது இத்தாலி-துருக்கி!

Gayathri Venkatesan