கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் மே 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.…

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் மே 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று ஒரே நாளில் 11,805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,78,298 ஆக உயர்ந்துள்ளது.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கல் உள்பட தற்போது 1,25,215 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனாவிலிருந்து 23,207 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 22,23,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று மட்டும் கொரோனாவுக்கு 267 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 30,068 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக கோவையில் 1,563 பேருக்கும், ஈரோட்டில் 1,270 பேருக்கும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் 793 பேர் மட்டுமே இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் குறைவான அளவிலேயே கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.