முக்கியச் செய்திகள் தமிழகம்

அரியர் தேர்வு மீண்டும் நடத்தப்படுமா?: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் என்ன?

கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் தமிழகத்தில் நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆகஸ்டு மாதம், நடத்தப்பட வேண்டிய அரியர் தேர்வைத் தமிழக அரசு ரத்து செய்து அரசாணை பிறப்பித்தது. இந்த ஆணையில் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் இந்த அரசாணையை சமூகவலைதளங்கில் பதிவிட்டு வரவேற்பு தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையைப் பாராட்டி அவருக்குப் பேனர் வைத்தனர். இந்நிலையில் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர்கள் குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரியர் தேர்வு ரத்து செய்வது தொடர்பான அரசாணையை மறுபரிசீலனை செய்ததில், தற்போது அனைத்து மாணவர்களுக்கும் அரியர் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரியர் தேர்வுகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக நடத்த வேண்டும் என்றும் தேர்வு நடைபெறும் தேதி குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவிடம் ஆலோசனை பெற்று முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நடைமுறைகளை 8 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:

Related posts

ட்விட்டர் ஸ்பேசஸ் மூலமாக நடத்தப்படும் சினிமா நிகழ்ச்சிகளால் சினிமா பிரபலங்களுக்கு சாதகமா? பாதகமா?

Vandhana

நெடுஞ்சாலை கணக்காளர்கள் தேர்வு முறைகேடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

எல்.ரேணுகாதேவி

திருச்சியில் இன்று திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்; லட்சிய பிரகடனத்தை வெளியிடுகிறார் ஸ்டாலின்

Saravana Kumar