அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியால் ரத்த உறைவு உள்ளிட்ட தீவிர பக்க விளைவுகள் ஏற்படுவதின் காரணமாக, அந்த தடுப்பூசியை பயன்படுத்த டென்மார்க் நாடு தடை விதித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் பிரிட்டிஷ்- சுவேடனின் அஸ்ட்ராசெனெகா என்ற பன்னாட்டு நிறுவனம் இணைந்து தயாரித்த
அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி உலகளவில் பல நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தடுப்பூசி உலகளவில் Covishield மற்றும் Vaxzevria என்ற பெயர்களிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியால் ரத்த நாளங்களில் ரத்த உறைவு உள்ளிட்ட பக்க விளைவுகள் அதனை எடுத்துக் கொண்ட சிலருக்கு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதே ரத்த உறைதல் உள்ளிட்ட தீவிர பக்க விளைவுகள் டென்மார்க் நாட்டில் எழுந்த காரணத்தால் அந்நாடு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பயன்படுத்த முழுவதுமாக தடை செய்துள்ளது. ஐரோப்பாவின் முதல் நாடாக டென்மார்க் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியால் இதேப் பிரச்னைகள் இருந்துள்ளது ஆனால், அந்த தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் பயன்கள் குறித்து ஐரோப்பிய மருத்துவ முகமை, அறிவுறுத்தி வந்ததை ஏற்றுக் கொண்டு, இந்த நாடுகள் மக்கள் பயன்பாட்டில் நிறுத்திவக்கப்பட்டிருந்த அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.