உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கும் தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28ம்…

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.