முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் முன்னணியில் உள்ள கட்சிகள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான 16 பதவியிடங்களில், திமுக 2 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

ஒன்றிய கவுன்சிலருக்கான 154 பதவியிடங்களில், திமுக 10 இடங்களிலும், அதிமுக 02 இடங்களிலும், முன்னிலையில் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலலுக்கான 11 பதவியிடங்களில், திமுக எட்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஒன்றிய கவுன்சிலருக்கான 98 பதவியிடங்களில், திமுக 20 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான 13 பதவியிடங்களில், திமுக 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஒன்றிய கவுன்சிலருக்கான 127 பதவியிடங்களில், திமுக 50 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும், முன்னிலையில் உள்ளது.

வேலூர் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான 14 பதவியிடங்களில், திமுக 7 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

ஒன்றிய கவுன்சிலருக்கான 138 பதவியிடங்களில், திமுக 40 இடங்களிலும், அதிமுக 8 இடங்களிலும், முன்னிலையில் உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான 13 பதவியிடங்களில், திமுக 2 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

ஒன்றிய கவுன்சிலருக்கான 125 பதவியிடங்களில், திமுக 10 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், முன்னிலையில் உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான 28 பதவியிடங்களில், திமுக 12 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், முன்னிலை வகிக்கிறது.

ஒன்றிய கவுன்சிலருக்கான 293 பதவியிடங்களில், திமுக 12 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், முன்னிலையில் உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான 19 பதவியிடங்களில், திமுக 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஒன்றிய கவுன்சிலருக்கான 180 பதவியிடங்களில், திமுக 4 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான 12 பதவியிடங்களில், திமுக 8 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

ஒன்றிய கவுன்சிலருக்கான 122 பதவியிடங்களில், திமுக 34 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், அமமுக 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான 14 பதவியிடங்களில், திமுக 7 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

ஒன்றிய கவுன்சிலருக்கான 144 பதவியிடங்களில், திமுக 26 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

யானைகள் வழித்தடங்களில் செங்கல் சூளைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர் நீதிமன்றம்

Halley karthi

தான்சானியா அதிபர் காலமானார்!

Saravana Kumar

கொரோனா பாதுகாப்பு.. ரசிகர்களுக்கு பிரபல நடிகை அட்வைஸ்!

Halley karthi