திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருண்ட மாநிலமாக மாறி வருவதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டதை சுட்டிக்காட்டினார். திமுக தவறான பாதையில் செல்வதாக குற்றம்சாட்டிய அவர், திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருண்ட மாநிலமாக மாறி வருவதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், “தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் அடித்துப் பேசிய 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் கோடைக்காலத்தை எப்படி நகர்த்துவது என்ற அச்சமும் மக்களிடைய ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் தடைபட்டது என்று கூறி மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துவிட நினைக்காமல், மின்வெட்டு தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும் கோடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். அதிமுகவை ஜனநாய முறைப்படி மீட்டெடுத்து சசிகலாவை பொது செயலாளர் ஆக்குவோம். அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் என கூறினார்.
குடியரசு தலைவர் தேர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் இருந்து ஒருவர் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டால் மகிழ்ச்சி என்று கூறினார்.