முக்கியச் செய்திகள் செய்திகள்

“தமிழக அரசின் திட்டங்கள் இந்தியாவுக்கு முன்மாதிரி” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட தமிழகத்தில் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களும் இந்தியாவிற்கு முன்மாதிரி திட்டங்களாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெறும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கும் விழா, ரூ. 330 கோடியில் நலத்திட்ட உதவிகள் விழாவில் முதல்வர் பங்கேற்றார். விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிகமான கல்வி நிறுவனங்கள் முதல்முதலில் உருவானது திருநெல்வேலியில் தான். திருநெல்வேலியின் புகழ் பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் 1944 முதலில் குடமுழுக்கு நடந்தது. அடுத்து 1974 மீண்டும் திமுக ஆட்சியில் தான் குடமுழுக்கு நடத்தப்பட்டது. திக்கெட்டும் புகழ் பரப்பு திருநெல்வேலி என்ற திருஞானசம்பந்தரின் வார்த்தைக்கு ஏற்ற திருநெல்வேலி மண்.

நெல்லையை தொல்லையாக நினைக்காமல் எல்லையாக நினைத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் செயல்பட்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் 1,113 பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். 9,319 கூட்டுறவுத் துறை சார்பில் விவசாயிகளுக்கு கடன் உதவி, 6 கோடியே 92 லட்சம் பேர் திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டணம் இல்லாத பேருந்து திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். 15 கோடி மதிப்பீட்டில் திருநெல்வேலியில் பொருளை அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி யாரை நம்பியார் கருமேனியாறு இணைப்பு திட்டம் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் அந்த திட்டம் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. தற்போது இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஆங்கிலேயர் காலத்து மேடை காவல் நிலையம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு என்று தொடங்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை காணி பழங்குடி மக்களுக்கு தனிநபர் பட்டா இன்று வழங்கப்படுகிறது

திருநெல்வேலி புத்தாக்க பயிற்சி மையத்தின்கீழ் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் இணைக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மணிமுத்தாறில் ஏழு கோடி மதிப்பீட்டில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். கடற்கரை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ராதாபுரத்தில் விளையாட்டுப் பயிற்சி மையம் அரங்கம் அமைக்கப்படும். திருநெல்வேலி மாநகரத்தில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாய்க்கு தேர் சிறப்பு திட்டம், தாய்மார்களை சிறப்பாக கண்காணித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களுக்கு நல்ல ஆளுமை விருது தமிழக அரசு வழங்குகிறது. திருப்பணிகரிசல்குளம் கால்வாய் காணாமல் போன நிலையில் அது கண்டறியப்பட்டு தூர்வாரப்பட்டு திருநெல்வேலி மாநகருக்கான வெள்ள பாதிப்பு நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பின்தங்கிய சட்டமன்ற தொகுதி என்று எதுவும் இருக்கக் கூடாது. அதனால்தான் தொகுதிக்கு 10 பிரச்னைகளை கவனத்திற்கு கொண்டுவர சொல்லி அத்துடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறேன். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இல்லை தமிழகத்தில் தான் இருக்கிறது. மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட தமிழகத்தில் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களும் இந்தியாவிற்கு முன்மாதிரி திட்டங்களாக உள்ளது.

இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று நினைத்த, புதுமை பெண்கள் திட்டம், மாதிரி பள்ளிகள் திட்டம் ஆகியவை ஆறு மாதத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மனம் திரண்டு பாராட்டியுள்ளார். தனிநபர் பிரச்சனை எங்கு இருந்தாலும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு சொல்லியிருக்கிறேன். திருவள்ளூர் மாவட்டத்தில் முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுமிக்கு தானியா மாவட்டத்தின் அமைச்சர் நாசர் மூலமாக தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்படி ஒரு அறுவை சிகிச்சை நடந்ததாக வரலாறு இல்லை. அந்த குடும்பத்தினர் மனம் திறந்து பாராட்டினார்கள். இதைவிட மிகப்பெரிய பாராட்டு இருக்க முடியாது.

நாம் அனைவரும் தமிழ் சமூகத்தின் குடும்பத்தினர். அதில் நானும் ஒருவர், நீங்களும் ஒருவர். அனைவரும் ஒன்றிணைந்து முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம். அதுதான் உண்மையான திராவிட மாடலாட்சி என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய தனுஷ்?

G SaravanaKumar

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியது ஏன்?: ஹர்திக் படேல் விளக்கம்

Halley Karthik

ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்..!

Web Editor