சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட்!

சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகிறது. இது குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிருவனமான யு வி கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. சில…

சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகிறது. இது குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிருவனமான யு வி கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

சில வாரங்களாக சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி பற்றித்தான் கோலிவுட் முழுக்க பேச்சாக இருந்தது வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில் சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் இருந்த நிலையில் அதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஆகஸ்ட் 21ஆம் தேதி சூர்யா -சிறுத்தை சிவா படத்தின் பூஜை நடைபெற்றதோடு படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குநர் சிறுத்தை சிவாவின் கனவுப் படம் எனக் கூறப்படும் இப்படம் 2 பாகங்களாகவும் 10 மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பை நடைபெறவுள்ளது.இந்த நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 24ஆம் துவங்கியது. இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் சூர்யா உள்ளிடோர் பகிர்ந்தனர். மேலும் இப்படத்தில் கதாபாத்திரங்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட நிலையில் நாளை (9-9-22) காலை 10 மணி அளவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகும் பட்சத்தில் சூர்யாவின் தோற்றம் குறித்த புகைப்படங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.