இலவசமாக எது கிடைத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் கூறினார்.
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி உள்ள தக்ஸ் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் கலந்து கொண்டார். அப்போய்ஜு பேசிய பாக்யராஜ், முன்பு பெண்கள் பயந்தவர்களாக இருந்தார்கள் என்றும், தற்போது பெண்களை பார்த்து நாம் தான் பயப்பட வேண்டியுள்ளது என்றும கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர் வாழ்க்கையில் இலவசமாக வருவதை நம்பாதே என்று தமக்கு ஒருவர் அறிவுரை கூறியதாகவும், ஆனால் தற்போது மக்களுக்கு எல்லாம் இலவசமாக கிடைப்பதாகவும் தெரிவித்தார். இது வரை நடைமுறையில் எல்லாம் இலவசமாகத் தான் வருகிறது. மக்கள் அதை வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள் யாரும் அதை வேண்டாம் என சொல்வதில்லை எனப் பேசினார்.
பிறகு பேசிய நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர், ஏ சினாமிகா படத்திற்கு பிறகு, வேறு மாதிரி படம் எடுக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் அதனால் தான் தற்போது ஆக்சன்கள் நிறைந்த தக்ஸ் படம் எடுத்துள்ளதாகவும் இயக்குநர் பிருந்தா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.







