முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுடெல்லி ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயிகள் சங்கம், தமிழக கரும்பு விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கம் என பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். விவசாயிகளின் வருகையை அறிந்த டெல்லி காவல்துறை, மத்திய தொழிற்படை பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் டெல்லி ரயில் நிலையத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து விவசாயிகளை டெல்லிக்குள் செல்ல விடாமல் தடுத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விவசாயிகளும் டெல்லி ரயில் நிலையத்திலே அமர்ந்து புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழங்களளை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர் நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழக விவசாயிகளோடு இணைந்து ஆர்பாட்டத்தில் கலந்து கொணரடனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேரணியிலும் பங்கேற்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தினர்.

புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து சிறுது தூரம் பேரணியாக சென்ற விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார் அங்கு தயார் நிலையில் இருந்த பேருந்துகளில் ஏற்றி சிங்கு எல்லை பகுதிக்கு அழைத்து சென்றனர். சிங்கு எல்லையில் 8 மாத காலத்திற்கு மேலாக வேளாண்சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆகஸ்ட் 11ம் தேதி வரை தமிழக விவசாயிகளும் போராட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏ-க்கு அண்ணாமலை கண்டனம்

EZHILARASAN D

முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரையும் முகாமிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் -சீமான்

EZHILARASAN D

தேர்தல் ஆணையத்தில் நாதக புகார் மனு அளித்தது ஏன்? – சீமான் விளக்கம்

G SaravanaKumar