முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் – அமைச்சர் அறிவிப்பு

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து வரும் 1ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், 2021-22 கல்வியாண்டில், மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை அரசு பேருந்துகளில் பள்ளி சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு ITI களில்  பயிலும் மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்

Advertisement:
SHARE

Related posts

புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா!

Niruban Chakkaaravarthi

ஆண்கள் தவறுகளுக்குப் பெண்களை குற்றம் சாட்டுவதா? பிரபல நடிகை சாடல்

Gayathri Venkatesan

தமிழ்நாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

Halley karthi