தமிழகம்: கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் நேற்றைய தினத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய தினத்தில் 27, 397 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை 13,51,362 பேர்…

தமிழகத்தில் நேற்றைய தினத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய தினத்தில் 27, 397 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை 13,51,362 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 241 பேர் கொரோனாவால் மரணமடைந்தனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,412 ஆக உள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் 23,110 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 11,96,549 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் நேற்றைத் தினத்தில் 1, 48,295 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 2,34,18,282 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனாவல் பாதிக்கப்பட்டு 1,39,401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.