முதல்வரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்க்கு சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. கடந்த 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் முதல்வரின் தனிச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக உதயச்சந்திரனை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.