முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 177 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,630 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 60 ஆயிரத்து 553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 643 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26
லட்சத்து 7 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில்,
பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 184 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை
பெற்று வந்தவர்களில் 211 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

நிவாரண நிதி மூலம் ரூ.472 கோடி வசூல்: அமைச்சர் தகவல்

Halley karthi

தமிழகத்தின் 38வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை!

Jayapriya

ஆவின் பால் விற்பனை,கொள்முதல் அதிகரிப்பு!