பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள அஜித்தின் வலிமை படத்துடன் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவான படம் வலிமை. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பூஜையுடன் தொடங்கிய படம் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. ஆனால், படம் குறித்த எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இதனால், படம் குறித்து அஜித் ரசிகர்கள், கிரிக்கெட் மைதானங்கள், அரசியல் தலைவர்கள், சமூக வலைதளங்களில் கேட்டு வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக படத்தின் மோஸ்டர் போஸ்டர், முதல் சிங்கிள், Glimpses ஆகியவை வெளியாகியது. அத்துடன் படம் பொங்கலுக்கு வெளியாகும் என படத்தின் இயக்குநர் போனி கபூர் அறிவித்தார்.
பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படமானது பிரம்மாண்ட பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வருகிறது.







