முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 648 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,653 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 43 ஆயிரத்து 683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 581 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25
லட்சத்து 91 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில்,
பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 310 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 204 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை
பெற்று வந்தவர்களில் 164 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 81.64 சதவீத வாக்குகள் பதிவு!

Halley karthi

‘ஒன்றிய அரசு’ – திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தீர்மானம்!

Halley karthi

ஆம்புலன்ஸில் உயிரிழந்த கொரோனா நோயாளி!

Hamsa