தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள படத்தின் டீசர் யூ-டியூப் தளத்தில் இன்று வெளியானது.
மாற்றுத்திறனாளி நீச்சல் வீரரின் வாழ்க்கைக் கதையை வைத்து கன்னட மொழியில் தயாராகியுள்ள இந்தப் படத்தில் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.எஸ்.விஸ்வாஸ்.
இவர் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தனது கைகளை இழந்தார். எனினும் மனம் தளராது, கல்லூரிப் படிப்பை முடிந்து நீச்சல், குங்ஃபூ போன்றவற்றில் பயிற்சி பெற்று சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கெடுத்து பல சாதனைகளை புரிந்து வருகிறார். இவரது கதைதான் Arabbie என்ற பெயரில் படமாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.
இதையும் படியுங்கள்: தரமான படத்தை தாங்கிப் பிடிக்க ரசிகர்கள் தவறியதே இல்லை-நடிகர் கமல்ஹாசன்
இந்தப் படத்தில் நடிக்க ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக அண்ணாமலை பெற்றுள்ளதாக
ஏற்கனவே அவரே தெரிவித்தார். கடந்த மாதம் 27 ஆம் தேதி மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அரபி படத்தின் டீசர் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் இந்தப் படத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்தை ராஜ்குமார் இயக்கி உள்ளார். கம்பட ரங்கா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
–மணிகண்டன்








