சட்டமன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து இன்று ஆலோசனை!

சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாநில தலைமைத்…

சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதேபோல தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை தலைவர், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் நாளை காலை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு ஆலோசனை நடத்துகிறது. புதுச்சேரி தலைமைச் செயலாளர், உள் துறைச் செயலாளர், காவல் துறை தலைவர், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் பிப்ரவரி 12ஆம் தேதி காலை தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு ஆலோசனை நடத்துகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply