தமிழகத்தில் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை, இரண்டாக பிரிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, ஆலோசிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம பேசிய சத்ய பிரதா சாஹூ, கடலூர் மாவட்டத்தில், புதிதாக 80 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இம்மாவட்டத்தில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் புதிதாக 21 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாநிலத்தில் 21லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளதாகவும்,
தேர்தலின்போது தமிழகத்தில் பாதுகாப்பு பணிகள் எப்போதும் சிறப்பாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.