தமிழகத்தில் அதிமுக அரசு அமைதியான முறையில் நல்லாட்சி நடத்தி வருவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் வைகை செல்வனை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றும்போது, நாடாளுமன்றத்தில் இருந்து 38 திமுக எம்பிக்களும் வெளிநடப்பு செய்ததாக கூறினார்.
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாது, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கும் திமுக எதிரி எனவும் அவர் சாடினார். அமைதியான முறையில் அதிமுக நல்லாட்சி அளித்து வருவதாக கூறிய ஜான் பாண்டியன், மீண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.







