தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாகப் போக்குவரத்துக் கழகம் சார்பாக 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டும் பயன் இல்லை என பொதுமக்கள் தெரிவிர்த்துள்ளனர்.
தமிழ் புத்தாண்டு முன்னிட்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல 500 சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கப்பட்டுள்ளது.
ஆனால், போக்குவரத்துக் கழகம் சார்பாக 500 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டும் போதுமான பேருந்து வசதி கிடைக்கவில்லை என பொதுமக்களுள் குற்றம் சாட்டுகின்றனர். முறையான பேருந்து வசதி இல்லாததால் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு முன்பாகவே பேருந்து முழுவதும் கூட்டம் நிரம்பிக் காணப்படுவதாக கூறுகின்றனர்.
வேலூர், திருவண்ணாமலை, சேலம் போன்ற பகுதிகளுக்குப் பேருந்து வசதிகள் குறைவாக காணப்படுவதால் பொதுமக்கள் இரண்டு மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பேருந்து பற்றாக்குறை எதிரொலியாக முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் போன்றவர்கள் நின்று கொண்டு பயணம் செய்யும் சூழல் நிலவி வருகிறது. அடுத்த வரும் நிகழ்வுகளுக்குப் பொதுமக்கள் பயன் பெரும் வகையில் வழக்கமான நேரத்தை விட 700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டால் பொதுமக்களின் தேவையானது குறையும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







