ஈக்வடார் நாட்டில் மீன்பிடி துறைமுகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடாக ஈக்வடாரில் உள்ள எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது. இங்கு படகு மற்றும் வாகனங்களில் துப்பாக்கியுடன் வந்த 30 பேர் கொண்ட மர்ம கும்பல், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த நிலையில், இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், கும்பலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில், துப்பாக்கி சூட்டில் உயிர்பிழைப்பதற்காக மீன்பிடி துறைமுகத்தில் இருப்பவர்கள் ஓட்டம் பிடிப்பதும், தண்ணீரில் குதித்து தப்பிப்பதும் பதிவாகி உள்ளது.







