விபத்தில் சிக்கிய வடமாநில தொழிலாளர்கள் – பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு இளைஞர்கள்

சாலை விபத்தில் சிக்கிய வட மாநில இளைஞர்களை பாதுகாப்பாக தமிழக இளைஞர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி…

சாலை விபத்தில் சிக்கிய வட மாநில இளைஞர்களை பாதுகாப்பாக தமிழக இளைஞர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான மினிவேனில்
பத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் சிப்காட்டில் உள்ள வார சந்தையில்
பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் காரைப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்
அப்பொழுது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில்
கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் – வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி

இந்த விபத்தில் மினி வேனில் வந்த எட்டு வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். அதனை கண்ட தமிழக இளைஞர்கள் விபத்தில் சிக்கிய அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு  108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் கவிழ்ந்து கிடந்த வேனையும் தமிழக இளைஞர்கள் தூக்கி நிறுத்தி அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இது சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர் தமிழகத்தில் ஆங்காங்கே வட மாநில தொழிலாளர்கள்
தாக்கப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில் தமிழக இளைஞர்களின் இந்த
செயல்பாடு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.