உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்கள் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. தமிழ்நாட்டைச்…

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்கள் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் உள்பட சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவரும் பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவரும் உக்ரைனில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களின் பிள்ளைகள் உள்பட தமிழ்நாட்டின் மாணவர்கள் அனைவரையும் உக்ரைனிலிருந்து மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காட்டாவூர் பகுதியைச் சேர்ந்த ஜெகன் – நாகஜோதி தம்பதியின் மகள் ரித்திகா உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று வருகிறார். அவரது விடுதியில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே உணவு இருப்பு உள்ளதாகவும் போர் அச்சத்தில் தவித்து வரும் தமிழ்நாட்டின் மாணவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே இந்திய மாணவர்கள் தங்கி உள்ள பெரும்பாலான விடுதிகளில் பாதாள அறைகள் இருப்பதாகவும் அதில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் எனவும் உக்ரைனில் இருந்து திருப்பூர் திரும்பிய மாணவர் லோகவர்ஷன் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் போர் பதற்றம் அதிகரிக்கும் முன்பாக மாணவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.