அதிமுக ஒருநாளும் தி.மு.க.வில் சங்கமம் ஆகாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி பலத்தோடு செயற்கையான வெற்றியை திமுக பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார். எதிர்காலத்தில் அதிமுக இருக்காது என்றும், தி.மு.க.வில் சங்கமமாகிவிடும் எனவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுக கடலினைப் போன்றது எனவும் திமுக ஆற்றினை போன்றது என்றும் கூறியுள்ள ஓ.பன்னீர்செல்வம், ஆறுதான் கடலில் போய் கலக்குமே தவிர, கடல் ஆற்றில் போய் கலக்காது எனக் கூறியுள்ளார்.
அதிமுக ஒருநாளும் தி.மு.க.வில் சங்கமமாகாது எனத் தெரிவித்துள்ள அவர், மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அதிமுக, இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் மக்களுக்காகவே இயங்கும் எனக் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








