முக்கியச் செய்திகள் உலகம்

‘ஒருபோதும் நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன்’: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக மீட்க திட்டமிட்டுள்ளதாக ஹங்கேரியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா 2வது நாளாக போர் தொடுத்துள்ளதால் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே உக்ரைனில் சிக்கி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை அழைத்துவர சென்ற ஏர் இந்தியா சிறப்பு விமானம், உக்ரைனின் வான்பகுதி மூடப்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 2 ஏர் இந்தியா விமானங்களை இயக்கப்பட உள்ளதாகவும், ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக இந்தியர்களை மீட்க திட்டமிட்டுள்ளதாகவும் ஹங்கேரியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யா, தம்மை கொல்லத் துடித்தாலும், ஒருபோதும் நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆவேசமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தன்னை கொல்வதே ரஷ்யாவின் முதல் இலக்கு என்றும், தனது குடும்பம் அவர்களது 2வது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். உக்ரைனின் தலைமையை அழித்து, அரசியல் ரீதியாகவும் உக்ரைனை அழிக்க ரஷ்யா நினைப்பதாக கூறிய அவர்,

கீவ் நகருக்குள் நாசவேலைகளில் ஈடுபடும் குழுக்கள் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, நகர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஊரடங்கு விதிகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அரசு பணிகளை மேற்கொள்ள, அதிகாரிகளுடன் ஒன்றாக அரசு இல்லத்தில் தங்கியிருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆர்யா வழக்கில் புதிய திருப்பம்

G SaravanaKumar

காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்; இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

G SaravanaKumar

கர்ப்பத்தை கலைக்குமாறு தகராறு செய்த கணவன்: கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி

Arivazhagan Chinnasamy