இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் திமுக எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றிபெற திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மு.க.ஸ்டாலின் நம்பர் ஒன் முதலமைச்சராக திகழ்கிறார் என்றும், முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.