முதன்முறையாக உலக அளவிலான குண்டு எறியும் போட்டிக்கு தகுதி பெற்று தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி முத்து மீனா, குண்டு எறிதல் போட்டியில் தொடர்ந்து 7 முறை தங்க பதக்கம் வென்றுள்ளார். தனது அசாத்திய திறமையால் சாதனைகளை குவித்து வரும் முத்து மீனா, இந்தியாவில் இருந்து முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான குண்டு எறியும் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவி முத்து மீனா ஆஸ்திரேலியா செல்வதற்கான அனைத்து செலவுகளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது. இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவரான ஆனந்த கண்ணன், அசாமில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆனந்த கண்ணன், முத்துமீனா இருவரும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு ஆணைய அலுவலரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதபோல், ஆசிய நாடுகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் பிரிவில் சௌமியா என்பவரை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த நந்திதா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.








