தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு சிறந்த தலைமை தேர்தல் அதிகாரிக்கான விருது வழங்கப்பட்டது.
12வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை தேர்தலை சிறப்பாக நடத்தியற்காக, சிறந்த தலைமை தேர்தல் அதிகாரிக்கான விருதை, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு பெற்றுக்கொண்டார்.
அதேபோல், மாவட்ட அளவில் ஐ.டி. தொழில்நுட்பத்தை சிறந்தமுறையில் அமல்படுத்தியதற்கான விருதை நெல்லை ஆட்சியர் விஷ்ணு பெற்றுக்கொண்டார். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தூத்துக்குடி ஆட்சியர் கே.செந்தில்ராஜுவுக்கு விருது வழங்கப்பட்டது. திருநங்கைகள், நரிக்குறவர் சமுதாய வாக்காளர்கள் மத்தியில் வாக்கு அளிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








