டெல்லி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பகத்சிங் உருவப்படங்கள்

டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இனி முதலமைச்சரின் படங்களுக்கு பதிலாக அம்பேத்கர், பகத்சிங் உருவப்படங்கள் வைக்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், முதலமைச்சர் அரவிந்த்…

டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இனி முதலமைச்சரின் படங்களுக்கு பதிலாக அம்பேத்கர், பகத்சிங் உருவப்படங்கள் வைக்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த ஜனவரி 15-ஆம் தேதி 30 சதவீதமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 20 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். டெல்லியில் தடுப்பூசி பணி சீரான நடைபெற்று வருவதால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறிய அவர், விரைவில் கட்டுப்பாடுகளை நீக்க மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிகளை மேற்கொள்வோம் என குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு சிறந்த தலைமை தேர்தல் அதிகாரிக்கான விருது வழங்கப்பட்டது.

மேலும், டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இனி முதலமைச்சர் படங்களுக்கு பதிலாக அம்பேத்கர், பகத்சிங் உருவப்படங்கள் வைக்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.