குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் நடத்தப்படும் சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே டி.எஸ்.பி முத்துக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்ப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்
மேலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகிறது எனவும், சந்தேகத்திற்குரிய நபர்கள் தென்பட்டால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு மையம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








