முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டிற்கு 7 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

புனேவில் இருந்து ஏழு லட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அவ்வப்போது தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. தமிழ்நாட்டிற்கு இதுவரை மத்திய அரசின் தொகுப்பில் இருந்தும், தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 85 லட்சம் கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் சுமார் 1 கோடியே 82 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்நிலையில் நேற்று புனேவில் இருந்து விமானம் மூலம் 5 லட்சத்தி 42 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. 46 பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

அதே விமானத்தில் 13 பெட்டிகளில் 1 லட்சத்தி 56 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய தொகுப்பிற்காக பெரியமேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. தடுப்பூசிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:

Related posts

கூடுதல் கொரோனா தடுப்பூசி கேட்கும் தமிழக அரசு!

Ezhilarasan

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; தமிழக அரசு அரசாணை!

Jayapriya

சேலத்தில் ஆசிரியைக்கு கொரோனா; தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை தீவிரம்!

Jayapriya