அதிரடி பாய்ச்சலில் தமிழ்நாடு காவல்துறை : 60 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – பின்னணி என்ன..?

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 60 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதன் பின்னணி குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. உலக அளவில் புலனாய்வில் சிறப்பாக செயல்பட்டு வரலாற்று சாதனை…

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 60 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதன் பின்னணி குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.

உலக அளவில் புலனாய்வில் சிறப்பாக செயல்பட்டு வரலாற்று சாதனை படைத்தது இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்து காவல்துறை ,அதே போல் தமிழ்நாடு காவல்துறையும், ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக புலனாய்விலும், காவல் பணியிலும் சிறந்து விளங்கி வருகிறது தமிழ்நாடு காவல்துறை.


குறிப்பாக நாட்டில் முதல் முறையாக கடலோர காவல் படை, காவல் துறையில் மகளிருக்கு பணிவாய்ப்பு, மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் பாதுகாப்பில் நவீன முன்னெடுப்புகள் என தமிழ்நாடு காவல் துறை , மற்ற மாநிலங்களின் காவல் துறைக்கும் முன்னோடியாக விளங்கி வருகிறது என பாதுகாப்பு நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்

என்ன தான் உலக அளவில் தமிழ்நாடு காவல்துறை பெயர் பெற்று விளங்கினாலும், அறிவியல் துறை உச்சம் தொட்டு வரும் இன்றைய சூழலில் சில விரும்பதகாத நிகழ்வுகளினால் தமிழ்நாடு காவல் துறை சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு காவல்துறையில் சமீபத்தில் சில முக்கிய அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. பணியிட மாற்றம் சாதாரண நிகழ்வு என்றாலும் தற்போதைய பணியிட மாற்றம் தமிழ்நாடு காவல்துறை முன் சவால்களை களைய எடுக்கப்பட்ட அதிரடி முடிவாகவே பார்க்கப்படுகிறது

அதன்படி ஆகஸ்ட் 5 ம் தேதி, டி.ஐ. ஜி முதல் டிஜிபி வரையிலான 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பி.கே.ரவி, வன்னிய பெருமாள் ,ராஜிவ் குமார் உள்ளிட்ட டிஜிபி-க்களுக்கு முக்கிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. அதே போல் பால நாகதேவி, அபின் தினேஷ் மோதக் மற்றும் வினித் வாங்டே உள்ளிட்ட ஏ.டி,ஜி.பிக்கள், அனுபவமுடைய பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர்.

ஆசியம்மாள், சத்யபிரியா, அஸ்ராகார்க், சுதாகர் உள்ளிட்ட ஐஜிக்கள் முக்கிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டலங்கள், சென்னை மாநகரம், டிஜிபி அலுவலக தலைமையகம் என மாறி மாறி பணியிl அமர்த்தப்பட்டனர்.
டி.ஐ.ஜி க்கள் நிலையிலும் முக்கிய பணியிட மாற்றங்கள் நடைபெற்றுள்ளது.

அடுத்த கட்டமாக உதவி .ஐ.ஜிக்கள் , மாவட்ட எஸ்.பிக்கள், மாநகரங்களில் துணை ஆணையர்கள், சிறப்பு பிரிவின் அதிகாரிகள் மட்டத்திலும் பெரிய மாற்றங்கள் நடந்துள்ளது. குறிப்பாக மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் மாநகரங்களின் காவல் துறையிலும், அதிக அளவில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் சமீபகாலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்டம் – ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு நிலைநிறுத்த இந்த அதிரடி மாற்றங்கள் நடந்திருப்பதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, திருச்சி, சேலம், மதுரை என தமிழகம் முழுவதும் பரவலாக பழைய ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு, புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

என். ஸ்ரீநாதா, இ.எஸ். உமா ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் , டிஜிபி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஐஜி க்களாக நியமனம் செய்யப்பட்டனர். அன்கித் ஜெயின் , ஆர்.சக்திவேல், அல்லட்டிபள்ளி பவன் குமார் ரெட்டி, ஜோஸ் தங்கையா, அதிவீர பாண்டியன் , ராமர், லாவண்யா,சந்த்ர மவுலி,உமையாள்,வருண்குமார், சினேக பிரியா உள்ளிட்டோர் மாவட்டங்களில் எஸ்.பி சிறப்பு பிரிவு, டிஜிபி அலுவலக பணியிடம், மாநகர காவல் துறை போன்ற முக்கிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மிக இளம் வயதில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ,காவல் துறையில் அதிரடி வியூகம் வகுத்து எஸ்.பிக்கள் முதல் டிஜிபி வரையிலான 60 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்துள்ளார். இது தமிழ்நாடு காவல்துறை மேலும் பொலிவு பெற உதவும் என முழு நம்பிக்கை தெரிவிக்கின்றனர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள்.

ரா.தங்கபாண்டியன் , நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.