32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

வெள்ளித்திரையில் 64 ஆண்டுகள்! வாழ்த்து மழையில் நனையும் கமல்ஹாசன்!

கமல்ஹாசன் நடித்து 1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படம் வெளியாகி இன்றோடு 63 ஆண்டுகள் முடிவடைந்து 64வது ஆண்டு தொடங்குகிறது. இதனையொட்டி சமூக வலைதளங்களில் கமலுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நான்கு வயதிலேயே நடிக்க தொடங்கிய கமல்ஹாசன் நடிப்பு மட்டுமல்லாது, திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், பாடகர், நடனக் கலைஞர், தயாரிப்பாளர் என எந்தத் துறை எடுத்தாலும் அதில் கில்லாடியாக பணியாற்றும் திறமைசாலி. தமிழ் சினிமாவில் பல புதுமைகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். படங்கள் வசூலில் பிரச்னை ஏற்பட்டாலும் தனது சோதனை முயற்சியை கைவிடுவதே இல்லை. ஓடிடி வருவதையும் முன்னமே கணித்த என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கமல்தான்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பதம் ஸ்ரீ, பத்ம விபுஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழை தவிர்த்து மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் நடித்து அங்கேயும் தனித்து மிளிர்ந்தவர் கமல்ஹாசன். லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்தியன் 2 , கல்கி 2898 படத்திலும் நடித்து வருகிறார். கமல் 233வது படத்தினை எச்.வினோத்தும் கமல் 234 படத்தினை மணிரத்னமும் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலின் பல படங்களின் கதாபாத்திரங்கள் அடங்கிய போஸ்ட்ரை பகிர்ந்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து நடிகர் கமல், “64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாள்கள் என் மக்களுக்காக” என கமல் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

பாடலாசிரியர்களுக்கு திருமா அழைப்பு!

Halley Karthik

இந்தியன் ஆயில் நிறுவனம் ஏரியில் மண் எடுக்கும் வழக்கு: அரசும், மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Editor

இது எனது அரசல்ல, நமது அரசு : தருமபுரம் ஆதீனம் கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Web Editor