தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு! 91.17% பேர் தேர்ச்சி!

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு வெளியானது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியானது.  இதில் 94% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.  தொடர்ந்து, பத்தாம்…

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு வெளியானது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியானது.  இதில் 94% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.  தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியானது.  இதில், 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி, மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது.  இந்த தேர்வை  7,534 பள்ளிகளை சேர்ந்த 3,89,736 மாணவர்கள், 4,30,471 மாணவிகள் என மொத்தம் 8,20, 207 மாணவர்கள் எழுதினர்.  இதுதவிர,  5,000 தனித்தேர்வர்களும், 187 சிறைவாசிகளஉம் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.

இந்நிலையில்,  ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் – 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.  மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www.tnresult.nic.in http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்தார். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில்  91.17 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.