தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் கமென்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற ஜூலை 28 ம் தேதி துவங்கி ஆகஸ்ட்
8ந்தேதி வரை பர்மிங்காமில் நடைபெறவுள்ளன. இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் தொடரின் 100 மீ மற்றும் 4*100 தொடர் ஓட்ட பந்தயத்தில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் அவர் தோல்வி அடைந்தார். இதனையடுத்து ஊக்கமருந்து சோதனையில் அவர் தோல்வியுற்றதால் இந்த கமென்வெல்த் தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
மேலும் கர்நாடகாவை சேர்ந்த மும்முறை தாண்டுதல் வீராங்கனை ஐஸ்வர்யா பாபு ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால் கமென்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இவர் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் மும்முறை தண்டுதலில் 14.14 மீட்டர் தாண்டி தேசிய அளவில் சாதனை படைத்து காமென்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனலட்சுமி மற்றும் ஐஸ்வர்யா பாபு இருவரும் சமீபத்தில் நடைபெற தேசிய அளவிலான தடகள போட்டியில் ஊக்கமருந்து சோதனையியல் தோல்வி அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








