சென்னையில் ஆன்மீக-கலாசார சுற்றுச்சூழல் பூங்கா-சுற்றுலா துறை அறிவிப்பு

ஆன்மீக மற்றும் கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா சென்னையை அடுத்த நேம்மேலியில் அமைக்கப்படவுள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையிலிருந்து 30 கிமீ தொலைவில் நெம்மேலியில் அமைகின்றது ஆன்மீக மற்றும்…

ஆன்மீக மற்றும் கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா சென்னையை அடுத்த நேம்மேலியில் அமைக்கப்படவுள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையிலிருந்து 30 கிமீ தொலைவில் நெம்மேலியில் அமைகின்றது ஆன்மீக மற்றும் கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைப்பதற்கு விரிவான பெருந்திட்டம் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசகருக்கான முன்மொழிவு வெளியிடப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையுடன் சுற்றுலாத் துறை இணைந்து அமைக்கப்படும் ஆன்மீக மற்றும் கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா, இந்து சமய அறநிலையத் துறைக்குச் துறைக்குச் சொந்தமான 223 ஏக்கர் நிலத்தில் அமைகின்றது.

கடற்கரையை ரசிக்கும் வகையில் குடில்கள், உணவகம், காட்சி கோபுரம், பாரம்பரியம் மற்றும் கலாசாரம் சார்ந்த சுற்றுச்சூழலுடன், படகு சவாரி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சிறப்பு பொழுதுபோக்கு அமைப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

சிற்பங்கள், பரிசுப் பொருட்கள் விற்பனையகம், திறந்தவெளி அரங்குகளுடன் அமையவுள்ள பூங்கா அமைப்பதற்காக, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பிற இடங்களிலும் உள்ள பூங்காக்கள் மாதிரியும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.