தமிழகத்திற்கு இரு மொழி கல்வி கொள்கை தான் தேவை என உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான 19வது மண்டல தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
அப்போது பேசிய அமைச்சர் க. பொன்முடி, தமிழகத்தில் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள். எனவே, அங்கே பேச ஆங்கில மொழியும், தமிழகத்தில் பேச தாய்மொழியான தமிழ் மொழியும் மட்டும் போதும்.
இருமொழி கொள்கை தான் தமிழகத்திற்கு வேண்டும். மூன்றாம் மொழி பாடம் கட்டாயமில்லை. ஆகவேதான் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரு மொழி கொள்கைக்காக தமிழகத்தில் ஒரு குழுவை நியமித்து உள்ளார் இரு மொழி கொள்கைதான் தமிழகத்துக்கு தேவை எனதெரிவித்தார்.







