இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலையை இன்று திறந்து வைக்கிறார் தமிழக அமைச்சர்!

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி இன்று திறந்து வைக்கிறார். கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சொந்த ஊரான கேம்பர்ளி நகரத்தின் மையப்…

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி இன்று திறந்து வைக்கிறார். கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சொந்த ஊரான கேம்பர்ளி நகரத்தின் மையப் பூங்காவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழ்நாடு அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ பெரியசாமி திறந்து வைக்கவும், விழாவில் இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இங்கிலாந்து மகாராணியின் திடீர் மரணத்தால் நாளை நடைபெறவிருக்கிற கர்னல் ஜான் பென்னிகுக் திருவுருவச் சிலை நிகழ்வில் சில மாற்றங்கள் செய்து விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கலாசார நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், உணவு உபசரிப்புகள் மற்றும் அமைச்சர், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், கவுன்சிலர்கள் உரை நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசின் குழு கேம்பர்லி நகரில் நிறுவப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் திருவுருவச் சிலையினை பார்வையிட்டு மரியாதை செலுத்துவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.