சமூக பாதுகாப்புத் துறை வலைத்தளத்தில் கூடுதல் புதிய சேவைகள்-அமைச்சர் கீதா ஜீவன்

சமூக பாதுகாப்புத் துறை வலைத்தளத்தில் குழந்தை பாதுகாப்பு, தகவல் மேலாண்மை மற்றும் கண்கானிப்பு அமைப்பினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். சமூக நலன் மற்றும்…

சமூக பாதுகாப்புத் துறை வலைத்தளத்தில் குழந்தை பாதுகாப்பு, தகவல் மேலாண்மை மற்றும் கண்கானிப்பு அமைப்பினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:

போக்சோ சட்ட வழக்குகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் காவல் துறையை முடுக்கி விட்டுள்ளார். தனியார் நடத்தும் இல்லங்கள், அங்கீகாரம் புதிப்பித்தல், புதிய அங்கீகாரம் பெறுதல் ஆகியவை இந்த வளைத்தளம் மூலம் பெற முடியும்.

அனைத்து இல்லங்களிலும் இருப்பவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் 14 பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு தேவைப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும் வரை தொடர் கண்காணிப்பில் துறை நிச்சயம் ஈடுபடும்.

மின் ஆளுமை வழியாக வளைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து இல்லங்களை கண்காணிக்க உதவிகரமாக இந்த வளைத்தளம் இருக்கும். கொரோனாவால் பெற்றோரை இழந்த 16 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை மூலம் பள்ளி, கல்லூரிகளின், மருத்துவமனை விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களில் உரிய வழிகாட்டுதல் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்களுக்கும் தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்படும். குழந்தைகளுக்கு வாரத்தில் 6 நாள் தினமும் 3 வேலை துரித உணவு எடுக்கும் நிலை கவலை அளிக்கிறது. பெற்றோர்கள் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். துறை சார்பிலும் உரிய வழிகாட்டுத்தல் வழங்கப்படும் என்றார் கீதா ஜீவன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.